நாட்டில் அவசர கால நிலை பிரகடனம்..

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

அவசர கால நிலை சட்டத்தின் படி அதிக அதிகாரங்கள் அரச இயந்திரத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய அனர்த்தத்தின் போது நாட்டின் சாதாரண நடவடிக்கைகளுக்கு பாதகம் ஏற்படுவதை தடுத்து நிறுத்துவதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அந்த அதிகாரங்களை பயன்படுத்தி மக்களின் இயல்பு வாழ்க்கையை மீள் அமைப்பதே இதன் நோக்கம் என ஜனாதிபதியின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மின்சாரம் வழங்கல் தொடர்பான சேவைகள்,

எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம் மற்றும் கொண்டு செல்லல்,

வைத்தியசாலைகள், வைத்திய சேவைகள் வழங்கும் அனைத்து நிறுவனங்களும் பணியில், 

போக்குவரத்து மற்றும் பொருட்கள் கொண்டு செல்லல்,

நீர் வழங்கல் மற்றும் அது தொடர்பான அனைத்து சேவைகளும்,

அத்தியாவசிய சேவைகள் வழங்கல் மற்றும் அது தொடர்பான அனைத்தும்

Share this Article
Leave a comment