நாகபூசனி அம்மன் சிலையை அகற்றக்கோரி வழக்கு – 30 இந்து அமைப்புக்கள் நீதிமன்றில் பிரசன்னம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தீவகத்தின் நுழைவாயிலான யாழ்ப்பாணம், பண்ணை சுற்றுவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள நாகபூசனி அம்மன் சிலையை அகற்றக்கோரி யாழ்ப்பாணம் பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு இன்று (ஏப்ரல் 19) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.

வழக்குக்காக 30க்கும் மேற்பட்ட இந்து அமைப்புக்களின் பிரதிநிதிகள் தற்போது நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளனர்.

இந்து அமைப்புக்களின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், மூத்த சட்டத்தரணிகளான நா.சஸ்ரீகாந்தா, வி.திருக்குமரன் உட்பட பெரும் எண்ணிக்கையான சட்டத்தரணிகள் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளனர்.

Share this Article