நல்லூர் பிரதேச செயலகத்தின் புதிய உதவிப் பிரதேச செயலாளராக இராமலிங்கம் சிவகரன் அவர்கள் புதன்கிழமை (ஒக்.22) உத்தியோகபூர்வமாக பதவி ஏற்றார்.
பிரதேச செயலக அலுவலகத்தில் நடைபெற்ற இப்பதவியேற்பு நிகழ்வில், நிர்வாக கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி தலைப்பீட முகாமையாளர்கள், கிளைத்தலைவர்கள் மற்றும் பல்வேறு பிரிவு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.