நல்லூர் பிரதேச செயலகம் ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகள் – 2025 வென்றது!

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

இலங்கையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இலங்கைமத்திய சுற்றாடல் அதிகார சபையினால் ”2025 ஜனாதிபதி சுற்றாடல் விருதுவழங்கல்நிகழ்வு  கடந்த ஒக். 23 கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்தசர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்தலைமையில் நடைபெற்றது.

தன்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் நல்லூா் பிரதேச செயலகம் சிறந்த அரசஅலுவலகத்திற்காக Merit Award மற்றும்  அகில இலங்கை ரீதியாக சிறந்தசமூக வலைத்தளத்திற்கான (Facebook ) Special Jury Award ஆகிய  இவ்இரண்டு விருதுகளையும் பெற்றுக் கொண்டது.

இந்த ஆண்டு ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கல் நிகழ்வானதுஅழகானநாடுபுன்னகைக்கும் மக்கள்என்ற நோக்குடன் செயல்படுத்தப்படும் கிளீன்ஸ்ரீலங்கா திட்டத்துடன் இணைந்ததாக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதோடு  சுற்றுச்சூழலுக்கு உகந்த கைத்தொழில் பிரிவு,சுற்றுச்சூழலுக்கு உகந்த அரசநிறுவன பிரிவு, சுற்றுச்சூழலுக்கு உகந்த தனியார் துறை பிரிவு , சுற்றுச்சூழலுக்கு உகந்த பாடசாலைகள்,புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திட்டபிரிவு, சுற்றுச்சூழலுக்கு உகந்த புத்தாக்கப் பிரிவு, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகசெயல்படும் அரச சார்பற்ற நிறுவன பிரிவு, ஊடக பிரிவு மற்றும் சமூக ஊடகபிரிவு ,ஆகிய 9 பிரிவுகளின் கீழ் மொத்தம் 132 விருதுகள் வழங்கப்பட்டன.

சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கு சிறந்த பங்களிப்பு வழங்கிய கைத்தொழில்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், ஊடகநிறுவனங்கள், சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும்பாடசாலைகள் மற்றும் சமூகப் பங்களிப்பை வரவேற்கும் வகையில் நாட்டில்சுற்றுச்சூழலுக்கு உகந்த கைத்தொழில்கள், வர்த்தகங்கள் மற்றும் சேவைக்கலாசாரத்தை கட்டியெழுப்புதல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில்செயல்படுவதற்காக சமூகத்தை ஊக்குவித்தல் மற்றும் நிலைபேறானஅபிவிருத்திக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகியநோக்கத்தில் மத்திய சுற்றாடல் அதிகார சபையால் ஜனாதிபதி சுற்றாடல் விருதுவழங்கல் நிகழ்வு ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படுகிறமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article