நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய உயர்திருவிழாவை முன்னிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை (மே 14) அம்மன் ஆலய அலுவலக மண்டபத்தில் வேலணை பிரதேச செயலாளர் க.சிவகரன் தலைமையில் முன்னாயத்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது சம்பந்தப்பட்ட திணைக்கள தலைவர்கள் மற்றும் ஆலய அறங்காவலர் சபையினர் கலந்துகொண்டனர்.
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய உயர்திருவிழா- 2024 எதிர்வரும் ஜூன் 07 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.