நயினாதீவு உள்ளூர் போக்குவரத்து அரச பேரூந்து பழுது- மக்கள் அவலம்!!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நயினாதீவு உள்ளூர் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து பழுதடைந்தமையால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூர் சேவைக்கென இலங்கை போக்குவரத்து சபையின் ஒரு பேரூந்து மாத்திரமே சேவையில் ஈடுபட்டுவந்த நிலையில் அதுவும் பழுதடைந்தமையால் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாவிகள் தங்கள் பயணங்களை மேற்கொள்வதில் சிரம்ப்படுவதுடன், பாடசாலை மாணவர்கள் , வைத்தியசாலை செல்வோர் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

திருத்தம் தொடர்பாக கோரிக்கைகள் விடப்பட்டபோதும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Share this Article