நயினாதீவு உப அலுவலக பொதுநூலகத்தின் ஏற்பாட்டில் சிறப்புற இடம்பெற்ற புத்தக கண்காட்சி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வேலணை பிரதேச சபையின் நயினாதீவு உப அலுவலக பொதுநூலகத்தின் ஏற்பாட்டில் நேற்றுமுன்தினம்(ஒக்ரோபர் 10) புத்தக கண்காட்சி சிறப்பாக இடம்பெற்றது.

நயினாதீவு பொதுநூலகத்தில் நயினாதீவு உப அலுவலக பொறுப்பதிகாரி தேவசெந்தூரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக ஓய்வுநிலை கிராம சேவையாளர் கா.பொ.இ.குலசிங்கம் (கவிஞர்) அவர்களும் சிறப்பு விருந்தினராக ஓய்வுநிலை ஆசிரியர் சுசிலா பிறேம்குமார் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக நயினாதீவு பாடசாலை அதிபர்களும் கலந்து சிறப்பித்தனர்.

பாடசாலை மாணவர்கள் புத்தகக் கண்காட்சியினை ஆர்வத்துடன் பார்வையிட்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article