2020ம் ஆண்டு பொதுத்தேர்தலினை முன்னிட்டு நெடுந்தீவுக்கு இன்று (ஜீலை 26) வருகை தந்தார் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான தோழர் டக்களஸ் தேவானந்த அவர்கள் அவருடன் இணைந்து போட்டியிடும் வேட்பாளர்களான திரு.ம.காந்தன் மற்றும் சட்டத்தரணி மு.றெமிடியஸ் ஆகியோரும் இவருடன் இணைந்து பயணித்தனர்.
நெடுந்தீவிற்கு வருகை தந்த தோழர் டக்களஸ் தேவானந்தாவிற்கு நெடுந்தீவில் அமோக வரவேற்பு இடம் பெற்றது மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவம் வழங்கப்பட்டதுடன், இளைஞர் மோட்டர் அணி குதிரை வீரர் அணி என்பன முன்னின்று வரவேற்க அமைச்சர் தேவா கலாச்சார மண்டபம் நோக்கி அழைத்து செல்லப்பட்டார் வழியிடையே நிறைகுடங்கள் வைக்கப்பட்டு மாலை அணிவித்து கௌரவம் வழங்கப்பட்டது
தேவா கலாச்சார மண்டபத்திலே பிரம்மாண்டமான முறையில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது அதில் கலந்து கொண்டு உரையாற்றி அமைச்சர் நெடுந்தீவு மக்கள் மீது தன் கொண்டுள்ள கரிசனையினை அன்பபையும் வெளிப்படுத்தியதுடன் தேர்தலில் வெற்றி கிடைத்து குறிப்பிட்ட சில நாட்களில் முடிந்த அத்தனை உதவிகளையும் வழங்குவேன் எனவும் குறிப்பாக பிரதான விதி திருத்தம் செய்து கொள்வதற்கான முழு முயற்சியும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்
பரப்புரைக் கூட்டத்தினைத் தொடர்ந்து ஈழமக்கள் ஜனநாயக்கட்சி அலுவலகத்திற்கு சென்ற தோழர் டக்களஸ் தேவானந்தா அவர்கள் இளையோர் அமைப்பு அங்கத்தவர்கள் கடற் தொழிலாளர் சங்க சமாச அங்கத்தவர்கள், முன்னாள் ஈழமக்கள் ஜனநாயக்கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் என பல்வேறான சந்திப்புக்களை மேற்கொண்டார் இச்சந்திப்பில் மக்கள் குறை நிறைகளைக் கேட்டறிந்து கொண்டதுடன் அதர்கான பதில்களையும் வழங்கினார்
தேர்தல் முடிவடைந்து ஒரு மாதத்திற்குள் தான் மீண்டும் நெடுந்தீவுக்கு உரிய அதிகாரிகளுடன் வருகை தந்து ஒரு நாள் நெடுந்தீவில் தங்கியிருந்து மக்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.