தேர்தல் பணிக்காக ஆட்சேர்ப்பு செய்யப்படும் பொதுத்துறை அதிகாரிகளுக்குவழங்கப்படும் கொடுப்பனவுகள் மற்றும் பிற கொடுப்பனவுகளில் இருந்துமுன்கூட்டிய தனிநபர் வருமான வரிக்கு(APIT) விலக்கு வேண்டும் என்ற தேர்தல்ஆணையகத்தின் கோரிக்கையை நிதி அமைச்சு நிராகரித்துள்ளது.
இந்த வரி விலக்கைக் கோரி தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் சிறிரத்நாயக்க, நிதி அமைச்சின் செயலாளருக்கு ஒகஸ்ட் 13ஆம் திகதி கடிதம்எழுதியிருந்தார்.
எனினும் இது சட்டத்திற்கு எதிரானது என்பதால், அத்தகைய விலக்குகளைவழங்க முடியாது என்று திறைசேரியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்டவர்களை தேர்ந்தெடுத்து வரி விலக்குகளை வழங்கினால், அதுநியாயமற்றது மற்றும் வரி செலுத்தும் மற்றவர்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாததுஎன்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.
தேர்தல் கடமையில் உள்ள அதிகாரிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளில்இருந்து “முன்கூட்டிய தனிநபர் வருமான வரி“கழிக்கப்பட்டவுடன், அவர்கள்வீட்டிற்கு எடுத்துச் செல்லும் தொகை குறைவாக இருக்கும்என்பதால்,திறமையான அதிகாரிகளை பணியமர்த்துவது கடினம் என்றுதேர்தல்கள் ஆணையாளர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் எதிர்வரும் ஏனைய தேர்தல்களுக்கு பெருமளவிலானஅரச அதிகாரிகளின் சேவைகள் தேவைப்படும் நிலையிலேயே இந்தகோரிக்கையை முன்வைப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.