மாவட்ட செயலகங்களில் இருந்து பரவலாக்கப்பட்ட நிதியில் இருந்துகொள்வனவு செய்யப்படும் பொருட்கள் பிரதேச செயலகங்களினால்விநியோகிக்கப்படுவதாகவும், அதன் மூலம் குறித்த ஒரு கட்சியானதுவாக்காளர்களை ஊக்குவிப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்தமுறைப்பாடுகளையடுத்து இவ்வாறான பொருட்களை தற்போது விநியோகிக்கவேண்டாம் என ஆணைக்குழு சகலமாவட்ட செயலகங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தின் ஒரு பிரதேச செயலகம் ஊடாக பலதோட்டப்பிரதேசங்களில் செயற்படும் அமைப்புகளுக்கு ஒலிபெருக்கிகள், பாத்திரங்கள், கூடாரங்கள் போன்றவற்றை விநியோகிக்கும் வண்ணம்அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் அறிவிப்பு செய்யப்பட்டிருந்ததாகநுவரெலியா மாவட்ட செயலக அதிகாரிகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமைமுறைப்பாடுகள் கிடைத்திருக்கின்றன.
தாம் சொல்லும் வரை குறித்த பொருட்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டாம் என்றும் தாம் தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு தோட்டங்களுக்குவரும் போது அவற்றை விநியோகிக்க வேண்டும் என்றும் தோட்டத்தலைவர்களுக்கு ஒரு அரசியல் கட்சி உத்தரவிட்டிருந்ததாகவும் முறைப்பாடுகள்செய்யப்பட்டிருந்தன. இதையடுத்து தேர்தல் ஆணைக்குழுவானது பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிஅமைச்சின் செயலாளருக்கு 09/08/2024 திகதியிடப்பட்ட கடிதம் மூலம்மேற்படி செயற்பாடுகளை நிறுத்தும்படி கடிதம் அனுப்பியுள்ளது.
இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்பதாக குறித்த பொருட்களைவிநியோகிக்குமாறு தமக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகங்கள்தெரிவித்துள்ளன. ஆனால் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளஇவ்வேளையில் இவ்வாறான பொருட்களை விநியோகிப்பது பொருத்தமானதல்லஎன தேர்தல்கள் ஆணைக்குழுவின் கருத்து. இது சில வேட்பாளர்களைஊக்குவிக்கலாம், மற்றவர்களுக்கு பாதகமாக இருக்கலாம். எனவே ஜனாதிபதித்தேர்தலின் பின்னர் இந்தப் பொருட்களை விநியோகிக்குமாறு அனைத்துமாவட்டச் செயலாளர்களுக்கும் பணிப்புரை விடுக்க விரும்புகின்றேன் எனஅக்கடிதத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஏ.எல். ரத்நாயக்கதெரிவித்துள்ளார்