மதுபானத்தின் விலையைக் குறைக்க தீர்மானம் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மதுபானத்தின் விலையை எதிர்காலத்தில் குறைக்க முயற்சிகள்மேற்கொள்ளப்பட்டு வருவதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 750 மில்லி லீட்டர் மதுபான போத்தல் ஒன்றின் விலை 900 – 1,000 ரூபாவினாலும், 175 மில்லி லீட்டர் மதுபான போத்தலின் விலை 200 ரூபாவினாலும் குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மையில் மதுவரித் திணைக்கள ஆணையாளருக்கும் மதுபானநிறுவனங்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, மதுபான உற்பத்திக்கு அதிகம் பயன்படுத்தப்படும் ஸ்பிரிட்களின்விலை குறைந்துள்ளதால், மதுபானத்தின் விலையைக் குறைக்க வேண்டும் எனமதுவரி திணைக்கள ஆணையர் தெரிவித்துள்ளார்

Share this Article