தேர்தலின் காரணமாக பாடசாலைகள் மூடப்படும்.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு, செப்டெம்பர் 20ஆம் திகதி அனைத்து பாடசாலைகளும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு, தேர்தல்கள் ஆணைக்குழு கல்வி அமைச்சுக்கு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது.

மேலும், செப்டெம்பர் 20ஆம் திகதி பாடசாலைகள் மூடப்பட்டு, செப்டெம்பர் 23ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

வாக்குச் சாவடி நிலையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள், செப்டெம்பர் 19ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் முடிந்ததும், கிராம அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்கு நிலையங்களுக்குத் தேவையான மேசைகள், நாற்காலிகள் மற்றும் பிற வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article