தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் பெயரைப் பயன்படுத்தி அன்பளிப்புக்கள் பெற்றுக் கொள்ள எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
ஆலய நிர்வாகம் தவிர்ந்த பிறநபர்கள் துர்க்காதேவி தேவஸ்தானத்தின் பெயரைப் பயன்படுத்தி பொருளாகவோ அல்லது பணமாகவே இவ் உற்சவ காலத்தில், அன்பளிப்புக்கள் பெற்றுக் கொள்ள எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்பதால் அடியவர்களும் பொது மக்களும், இவ் விடயத்தில் மிகுந்த கவனத்துடன் நடந்து கொள்ளுமாறு ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக் கொள்கின்றார்கள்.
பணமாகவோ, அரிசி முதலான அன்னதானப் பொருளாகவோ, வேறு பூசைப் பொருளாகவோ அன்பளிப்பு செய்ய விருப்புவோர், ஆலயத்தில் உள்ள நிதி அலுவலகத்தில் பதிவு செய்து தமக்குரிய பற்றுச் சீட்டினைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
சகல அன்பளிப்புக்களும் ஆலய அலுவலகத்திலே செலுத்தப்படல் வேண்டும் அல்லது கடிதம் மூலமாகவோ வங்கி இலக்கத்தின் ஊடாகவே அனுப்பி வைக்கப்படல் வேண்டும். கொடியேற்றம் மற்றும் கொடியிறக்கம் பொது உபயமாக நடைபெறுவது வழங்கம் என்பதால் இவ் உபயத்திற்கு,
அன்பளிப்பு செய்ய விருப்பும் அடியவர்கள் நிதி அலுவலகத்தில் பணத்தை செலுத்தி தமக்குரிய பற்றுச் சீட்டினை பெற்றுக் கொள்ள முடியும். தேவஸ்தான வங்கி கணக்கு இல -இலங்கை வங்கி சுன்னாகம் கிளை-074094, இலங்கை வங்கி காங்கேசன்துறை கிளை – 07573273, இலங்கை வங்கி பம்பலபிட்டி கிளை -071888, வர்த்தக வங்கி யாழ்ப்பாண கிளை 1060012692.
இவ் உற்சவ காலத்தில் பெண்களும் குழந்தைகளும் நகைகளை அணிந்து வருவதை கூடியளவு தவிர்த்துக் கொள்வது மிக நல்லது, அத்துடன் ஆலய உற்சவம் நிறைவு பெற்றதும் தமது வீடுகளுக்கு விரைவாக சென்று விடுவது மிக நல்லது.
இரவு நேரங்களில் ஆலய வீதிகளில் தங்குவது தவிர்க்கப்படல் வேண்டும். இவ் ஏற்பாடுகள் யாவும் அடியவர்களின் நன்மை கருதியே என்பதை கவனத்தில் கொள்ளவும்.
ஏதேனும் மேலதிக தகவல்கள் தேவைப்பட்டால் 0213213151 என்ற தொலைபேசி இலகத்தின் ஊடாகவோ அல்லது, thurkaiammantemple@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவே ஆலய நிர்வாகத்தினரை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள முடியும்.
இத் தகவல்கள் யாவும் ஆலய மஹோற்சவ விஞ்ஞாபன பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொது மக்களின் நன்மை கருதி அறியத் தரப்படுகின்றது.