துப்பரவு அற்ற நிலையில் காணப்பட்ட குமுதினி நினைவாலயம்
இன்றைய தினம் குமுதினிப்படுகொலையின் 36வது ஆண்டு நினைவு நாள் இன்று ஆகும். குமுதினிப் படுகொலையில் படுகொலைசெய்யப்பட்ட 36 உறுவகளின் நினைவாலயம் நெடுந்தீவு இறங்கு துறைமுகத்திற்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாலயம் நெடுந்தீவு பிரதேச சபையால் பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடதக்கது. இன்றைய தினம் கொரோனா அச்சம் காரணமாக பயணத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளமையால், குமுதினிப்படு கொலை நினைவு நிகழ்வுகள் தீவகத்தில் இடம் பெறவில்லை.
ஆயினும் உறவுகள் இன்றைய தினம் அஞ்சலி செலுத்துவதற்காக மலர் கொண்டு இறந்தவர்களின் தூபிக்கு சென்ற போதும், நினைவாலயம் மிகவும் குப்பையாக புனிதமற்று காணப்பட்டமை மிகுந்த வேதனையினை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய தினம் அஞ்சலி செலுத்துவதற்காக நினைவாலயம் சென்ற முன்னாள் பிரதேச சபை தவைலவர் அவர்கள் உடனடியாக நினைவாலயத்தினை துப்பரவு செய்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இப்பிரதேச சபை தற்போது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் கீழ் நிர்வகிக்கப்படுவதுடன் தற்போதைய பிரதேச சபை தலைவர் உறுப்பினர்கள்; குமுதினிப் படுகொலை நிகழ்வின் நினைவாலயத்தில் சத்தியபிரமாணம் மேற்கொண்டு தமது பணிகளை ஆரம்பித்த போதும், இவ் நினைவாலயத்தினை இன்யை நாளில் துப்பரவு இன்றி காணப்பட்டது கவலை அளிக்கும் நிகழ்வாக காணப்பட்டது.
இப் புனித இடத்தில் பிரதேச சபை ஏற்கனவே வியாபார நிலையத்தினை அமைத்துள்ளமை அதன் தூய்மையையும் வெளித்தோற்றத்தினையும் மாசுபடுத்துவதான கருத்தும் மக்கள் மத்தியில் காணப்பட்டு வருகின்றது.