தீயில் கருகிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கோப்பாய் வடக்கு கட்டுப்பலானைப் பகுதியில் தீயில் கருகி உயிரிழந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கோப்பாய் கிறிஸ்தவ கல்லுாரியில் நீண்ட காலம் கல்வி கற்பித்து ஓய்வுப் பெற்ற 65 வயதுடைய ஆசிரியரான கார்த்திகேசு திருப்பதி என்பவரே நேற்று (மே 16) மாலை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மனைவி உயிரிழந்த நிலையில் சிறிது காலம் தனிமையில் வசித்து வந்த இவர் அந்த சோகத்திலேயே தனக்குத்தானே தீயை முட்டி உயிரிந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருவதகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share this Article