தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இன்று (08.11) காலை 08.30 மணிக்கு யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன.
இந் நிகழ்வில் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ சுனில் குமார கமகே, யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணைநாதன் இளங்குமரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. பா. ஜெயகரன், யாழ்ப்பாண சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. விமல் சுவாமிநாதன், மாவட்டச் செயலக சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி கி. மாலினி, மாவட்ட இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி வி. மகிந்தினி, கலாசார உத்தியோகத்தர்கள், ஆலய தர்மகர்த்தா சபைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.