தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, எதிர்வரும் திங்கட்கிழமை (09/11) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள அனைத்து தமிழ்ப் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அந்தந்த மாகாண ஆளுநர்கள் அறிவித்துள்ளனர்.
குறித்த விசேட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், எதிர்வரும் சனிக்கிழமை (14/11) பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகள் திங்கட்கிழமை வழமைபோன்று இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நாளை (08/11) கொண்டாடப்படவுள்ள தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, மத்திய, ஊவா, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலுள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.