தந்தை செல்வாவின் 125 ஆவது பிறந்த தின நிகழ்வு செல்வா கலையரங்கத்தில்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read
செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் தந்தை செல்வாவின் 125 ஆவது பிறந்த தின நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (மார்ச் 31) பிற்பகல் 3.30 மணிக்கு தந்தை செல்வா கலையரங்கத்தில் நடைபெற்றது.
பேராசிரியர்.சி.பத்மநாதன் எழுதிய ‘தந்தை செல்வாவின் அரசியல் ஞானமும் சாதனைகளும்’ என்ற நூலும் கவிஞர் எ.எம்.எம்.அனஸ் ‘தந்தை செல்வா சீர்மை காவியம்’ எனும் கவிதை நூலும் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சி.பத்மநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மலையக மக்களின் மனித உரிமைகள் எனும் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவை சமூக அபிவிருத்திக்கான நிறுவன நிர்வாக இயக்குனர் பெரியசாமி முத்துலிங்கம் மேற்கொண்டார்.
தந்தை செல்வா நினைவுப் பேருரையை 13 ஆம் திருத்தச்சட்டம் மீதான ஒரு பிரதிபலிப்பு எனும் தலைப்பில் கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் ஆற்றினார்.
தந்தை செல்வாவின் 125 ஆவது பிறந்த தின நிகழ்வு தொடர்பாக நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள், பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
Share this Article