நாட்டில் அன்றாட வாழ்க்கைக்கு மக்கள் திண்டாடும் வேளையில், டெங்கு பரிசோதனைக்கு முறை யற்ற விதத்தில் பணம் வசூலிக்கப்படுவது குறித்து பொது மக்கள் கடும் விசனமடைந்துள்ளனர்.
அதிக கட்டணத்துக்கு பரிசோதனைகளை மேற்கொண்டதற்காக தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்கள் 15 இற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து அறவிடப்பட்ட அபராதத் தொகை 116 இலட்சம் ரூபாவாகும்.
நாடு முழுவதையும் அச்சுறுத்தும் ஒரு தொற்றுதோய் டெங்கு நுகர்வோர் அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமாளி அறிவித்தலின் பிரகாரம் முழு இரத்த எண்ணிக்கை பரிசோதனைக்கு 400 ரூபாவும் டெங்கு அன்டிஜன் பரிசோதனைக்கு 1,200 ரூபாவும் அறவிட முடியும்.
வர்த்தமானி அறிவிப்பில் விலைகள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவற்றை புறக்கணித்து நோயாளி களிடமிருந்து அதிகளவில் பணம் வசூலிக்கும் பல இடங்கள் குறித்து எமக்கு தெரியவந்தது.
அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வகங்களில் டெங்கு பரிசோதனை எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது?
அதனை அறிந்து கொள்வதற்காக நுகர்வோர் அதிகார சபையின் கொழும்பு மாவட்ட பிரிவினால் பல சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்படி வரம்பிற்கு மேல் கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்கள் 15 இற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வரம்பு மீறி கட்டணம் வசூலித்த இடங்களுக்கு தலா 05 லட்சம், 10 லட்சம், 15 லட்சம் ரூபாய்கள் அபராதம் விதிக்கப்பட்டதுடன், இதுவரை மொத்தமாக 116 லட்சம் ரூபா அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. அதேநேரம் வழக்கமாக தினசரி நடத்தப்படும் சுமார் 100 பரிசோதனைகளுக்கு ஒரு குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது மக்களின் கருத்தாகும்.