டெங்குத் தொற்றைக் கட்டுப்படுத்த யாழில் விசேட செயற்றிட்டம்

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read
This image depicts an adult female Aedes aegypti mosquito feeding on a human subject with darker skin tone.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எதிர்வரும் 16 மற்றும் 17ஆம் திகதிகளில் டெங்குக் கட்டுப்பாட்டுச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்குத் தொற்று அதிகரித்துள்ளது. சிலநாள்களுக்கு முன்னர் பெய்த மழை காரணமாக டெங்கு நுளம்புகள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

டெங்குத் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் சுகாதாரத் திணைக்களம், உள்ளூராட்சி சபைகள், பிரதேச செயலகம் என்பன இணைந்து கழிவுக் கொள்கலன்களை உரியமுறையில் அகற்ற நடவடிக்கை எடுக்கவுள்ளன.

இந்தச் செயற்றிட்டம் தொடர்பான கால அட்டவணை கிராம அலுவலர் ஊடாக மக்களுக்கு அறிவிக்கப்படும்.

டெங்குத் தொற்றைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகக்கு பொதுமக்கள், பொது அமைப்புக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share this Article