18.12.2024 புதன்கிழமை இரவு 10.00 மணி அவதானிப்பு.
கடந்த 14ம் திகதி தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய காற்றழுத்ததாழ்வு நிலை தற்போது பருத்தித்துறையில் இருந்து வட கிழக்கு திசையில் 256 கி.மீ. தொலைவிலும் சென்னைக்கு தென்கிழக்கு திசையில் 245 கி.மீ. தொலைவிலும், வேதாரண்யத்துக்கு கிழக்கு வடகிழக்கு திசையில் 268 கி.மீ. தொலைவிலும் காணப்படுகின்றது.
காலநிலை மாற்றத்தின் மிக முக்கியமான விடயங்களை நாம் இந்த வடகீழ்பருவக்காற்று காலத்தில் அனுபவிக்கின்றோம். அதற்கு மிகச் சிறந்தஉதாரணங்களாக அண்மித்த காலத்தில் வங்காள விரிகுடாவில் தோன்றியதாழமுக்கங்களை குறிப்பிடலாம். நகரும் திசை, பாதை கரையைக் கடக்கும்இடங்களை தெளிவாக வரையறுக்க முடியாத நிலை காணப்படுகிறது.
தற்போது காணப்படும் தாழமுக்கமும் இதற்கு நல்ல உதாரணம். இதன் நகர்வுப்பாதை பல ஆச்சரியங்களை தன்னுள்ளே கொண்டுள்ளது. நாளை கரையைக்கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இத் தாழமுக்கம் கடந்த பல மணி நேரங்களாகசீரற்ற நகர்வைக் கொண்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விடயம்என்னவென்றால் இது அடுத்த சில நாட்கள் வரை குழப்பமான நகர்வுப்பாதையையும் பல மணி நேரமாக அதே இடத்திலேயே காணப்படும் தன்மையைக்கொண்டிருப்பதுமாகும். இதற்கு மேலைக் குழப்பங்கள் ஒரு காரணமாயினும்வேறு பல காரணங்களும் உள்ளன. இது எதிர்வரும் 21.12.2024 க்கு பின்னர்இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் கரையைக் கடக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது ( இதில் மாற்றங்கள் நிகழலாம் என்பதனையும் கருத்தில்கொள்க).
இந்த தாழமுக்கத்தினால் எமது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு எந்தபாதிப்பும் இல்லை.
இந்த தாழமுக்கம் கடந்த சில நாட்களாக கிழக்கு மாகாணத்திற்கு கணிசமானஅளவு மழையைக் கொடுத்தது. ஆனால் வடக்கு மாகாணத்திற்கு எதிர்பார்த்தஅளவு மழையைக் கொடுக்கவில்லை.
தற்போது வடக்கு மாகாணத்தின் உள் நிலப்பகுதிகளில் சிறிய அளவில் பனிதொடங்கியுள்ளது. ஆனால் இது நிலையானது அல்ல.
பனி தொடங்கியுள்ளதால் மழை இனி கிடைக்காது என கருத வேண்டாம். பனியும்மழையும் எதிரெதிரான விடயங்கள் அல்ல. இரண்டுமே படிவுவீழ்ச்சியின்வேறுபட்ட வடிவங்களே. இக்காலத்தில் இவ்விரண்டுக்குமான பௌதிகசெயன்முறைகள் ஒன்றே.
இவ்வாண்டுக்கான வடகீழ் பருவக்காற்று செல்வாக்கு எதிர்வரும் ஜனவரிமாதத்தின் நடுப்பகுதி வரை தொடரும்.
எதிர்வரும் 25.12.2024 வரை இடையிடையே வடக்கு மற்றும் கிழக்குமாகாணங்களின் சில பகுதிகளுக்கு சற்று மிதமான மழை கிடைக்கும்வாய்ப்புள்ளது.
ஆனால் எதிர்வரும் 25.12.2024 முதல் 27.12.2024 வரை மீண்டும் வடக்கு மற்றும்கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரைமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
இன்னமும் தாழமுக்கம் கடற்பகுதியில் இருப்பதனால் மறு அறிவித்தல் வரைமீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது.
உண்மையில் இவ்வருட வடகீழ் பருவத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணவிவசாயிகளும் மீனவர்களும் மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கிடைத்தமிக மிக கன மழை காரணமாக விவசாயம் குறிப்பாக நெற் செய்கைபாதிப்படைந்துள்ளது( போதாத குறைக்கு தற்போது கருக்கல் நோய் வேறு). இம்முறை வழமைக்கு மாறாக இந்த பருவத்தில் தோன்றிய அதிகதாழமுக்கங்களால் ஏற்பட்ட கடற் கொந்தளிப்பு காரணமாக கடற்றொழிலும்பாதிக்கப்பட்டுள்ளது. உண்மையில் இவ்விரண்டு துறையினருக்கும் போதியநிவாரணம் வழங்கப்படல் வேண்டும். ஏனெனில் இவர்கள் தான் எங்கள் வாழ்வின்உயிர்நாடிகள்.