ஜனாதிபதி நாளை யாழ்ப்பாணம் வருகை!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

சாவகச்சேரியில் நடைபெ றவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக் கூட்டத்தில் பங்கு கொள்ளும் முகமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை(ஓகஸ்ட் 20) ஞாயிற்றுக்கிழமை யாழ். வரவுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக்கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு அக்கட்சியின் தென்மராட்சி இணைப்பாளர் கு. சர்வானந்தனின் ஏற்பாட்டில் சாவகச்சே ரியில் இடம்பெறவுள்ளது.

இதில் பங்கு கொள்ளும் முகமாகவே ஜனாதிபதி யாழ்.வரவுள்ளதாக ஐ.தே.க.தரப்பினர் தெரிவித்தனர்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலிதரங்க பண்டார கலந்து கொள்ளவுள்தாகவும், இதன்போது சமூர்த்தி கொடுப்பனவு நிராகரிக்கப்பட்டவர்கள், வேலைவாய்ப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பான விடயங்களை பேச முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Share this Article