ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் எதிர்வரும் நவம். 07ஆம்திகதி காலை விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் சக்தி அரசின் வரவு – செலவுத் திட்டம்நவம்பர் மாதம் 07ஆம் திகதி நிதி அமைச்சர் ஜனாதிபதி அநுரகுமாரதிஸாநாயக்கவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதியின் வரவு – செலவுத் திட்ட உரைக்கு அனுமதி பெறுவதற்காக விசேடஅமைச்சரவைக் கூட்டம் நடக்கவுள்ளது. ஜனாதிபதியின் வரவு – செலவுத் திட்டஉரை 2ஆம் வாசிப்பாகக் கருதப்படும்.
2ஆம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி முதல் 14ஆம் திகதிவரை நடைபெறும். 14ஆம் திகதி மாலை 2ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்புநடத்தப்படும்.
அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் நவம்பர்மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகும்.
வரவு – செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 5ஆம் திகதிநடைபெறும்.
தேசிய மக்கள் சக்தி அரசின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் அரச மொத்த செலவீனமாக 4 ஆயிரத்து 434 பில்லியன் ரூபாமதிப்பிடப்பட்டுள்ளது.