By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: ஜனாதிபதி இன்றையதினம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை !
Share
Notification
Latest News
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தனின் மகோற்சவம் நாளை ஆரம்பம்
யாழ்ப்பாணம்
இலஞ்சம் பெற்ற தரகர் கைது!
இலங்கைச் செய்தி
விளக்கமறியலில் முன்னாள் கடற்படைத் தளபதி
இலங்கைச் செய்தி
நாமல் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!
இலங்கைச் செய்தி
மாகாணசபை தேர்தலை நடத்துங்கள் – பவ்ரல் !
இலங்கைச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > ஜனாதிபதி இன்றையதினம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை !
இலங்கைச் செய்தி

ஜனாதிபதி இன்றையதினம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை !

Last updated: 2024/09/25 at 9:13 PM
Published September 25, 2024 304 Views
Share
9 Min Read
SHARE

ஜனாதிபதி தேர்தலின் வெற்றியின் உரிமையை நம் நாட்டின் அனைத்துமக்களுக்கும் அர்ப்பணிக்க விரும்புவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கதெரிவித்துள்ளார்.

இன்று (செப். 25) இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றியபோது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,

பிக்குமார்களே, மதத் தலைவர்களே, பெற்றோர்களே, சகோதர சகோதரிகளே, பிள்ளைகளே,

பல தசாப்தங்களாக நாம் எழுப்பிய குரலுக்கு மெது மெதுவாக ஆனால் சீராகசெவிசாய்த்து, நாங்கள் முன்வைத்த வேலைத்திட்டத்திற்கு உயிர்மூச்சாக இருந்தஇந்நாட்டு மக்கள் அனைவருக்கும் எங்களது கௌரவத்தைத் தெரிவிக்கிறோம்.

எங்கள் வேலைத்திட்டத்தில் உடன்படாத தரப்பினர் கூட நாங்கள் அடைந்தவெற்றியால் மகிழ்ச்சி அடைந்தால் மாத்திரமே நீங்கள் அளித்த இந்த வெற்றிமேலும் பலமானதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, இந்தவெற்றியின் உரிமையை நம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் அர்ப்பணிக்கவிரும்புகிறேன்.

நமது அரசியல் இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து, பல்வேறுஅவதூறுகளையும், பொய்யான, திரிபுபடுத்தப்பட்ட தகவல்களையும் ஒதுக்கிவிட்டு, புதிய பரிசோதனைக்கு அஞ்சாமல், எமது அரசியல் இயக்கத்திற்கு நமதுநாட்டின் ஆட்சி அதிகாரத்தை வழங்கும் அளவிற்கு பெரும் உறுதியுடன் இருந்தபிரஜைகள் உட்பட அனைத்து மக்களுக்கும் இந்த நாட்டைக் கட்டியெழுப்பும்பணிக்கு தோள் கொடுப்பதற்கான பலம் இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்.

இந்த வெற்றிக்காக எமக்கு முன்னரும், எங்களுடனும் பலவிதமானதியாகங்களைச் செய்த, சில சமயங்களில் தங்கள் உயிரைக்கூட தியாகம் செய்தபல தலைமுறைகளின் விலைமதிப்பற்ற ஆண்கள் மற்றும் பெண்கள்அனைவரையும் நாங்கள் மரியாதையுடன் நினைவுகூருகிறோம். இந்தவெற்றியையும், அதன் மூலம் கட்டியெழுப்பப்படும் வளமான நாட்டையும்அவர்களுக்கு அளிக்கும் கௌரவமாகவே நான் கருதுகிறேன்.

இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான பங்கை கூட்டுசெயற்பாடாகநிறைவேற்றும் திறன் எமக்கு உள்ளது.

அதற்கான மிகத் திறமையான குழு எங்களிடம் உள்ளது.

நம் அனைவருக்கும் அது குறித்த முழுமையான உறுதிப்பாடு உள்ளது. நாம்எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்த எத்தகைய மாற்றத்தையும்மேற்கொள்வதற்கு முன்னதாக பொருளாதாரத்தை நிரந்தரமான நிலைக்குஉயர்த்துவது அவசியம் என நாம் நம்புகிறோம்.

அதற்காக நீண்டகால மத்திய கால திட்டங்களைத் தயாரிப்பதற்கு முன்னர், பின்பற்ற வேண்டிய துரித பொருளாதார செயற்பாடுகளின் ஊடாக குறுங்காலஸ்தீரநிலையை ஏற்படுத்த நாம் நடவடிக்கை எடுப்போம்.

நாம் எதிர்பார்க்கும் மாற்றத்திற்காக குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பலநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் அவை அனைத்தும்தற்போதைய பொருளாதாரத்தில் ஸ்தீர நிலையையும் நம்பிக்கையும்கட்டியெழுப்புவதில் மாத்திரமே தங்கியுள்ளது.

அதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் துரிதமாக பேச்சுவார்த்தை ஆரம்பித்துநீடிக்கப்பட்ட கடன் வசதியுடன் தொடர்புள்ள விடயங்களை தொடர்ந்துமுன்னெடுக்க நாம் எதிர்பார்க்கிறோம்.

கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக, சம்பந்தப்பட்டகடன் தரப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அது தொடர்பான பணிகளைவிரைவில் நிறைவு செய்து, உரிய கடன் நிவாரணத்தைப் பெறுவதற்கு நாங்கள்நடவடிக்கை எடுப்போம்.

அதற்கு இந்த நாட்டு மக்களைப் போலவே சர்வதேச சமூகத்தினதும் ஆதரவையும்பெற முடியும் என நம்புகிறோம். அந்த ஒத்துழைப்பின் மூலம் இந்த கூட்டுமுயற்சியில் வெற்றி பெற முடியும் என எதிர்பார்க்கிறோம்.

எமக்கு அதிகாரத்தை கையளிக்கையில் ‘மாற்றம்‘ ஏற்படுத்த வேண்டும் என்றஎண்ணக் கருவே மக்களிடத்தில் ஆழமாக பதிந்திருந்தது. மாற்றம் என எமதுநாட்டு மக்கள் கருதுவது அரசியல் முறைமையில் காணப்படும் அனைத்துவிதமானமோசமான பண்புகளை மாற்றுவதையாகும்.

தற்போது அது நிரூபனமாகியுள்ளது. இந்த நாட்டில் நடைபெற்றஅனைத்துவிதமான தேர்தல்களையும் நோக்கினால், தேர்தலுக்குப் பின்னரானஎந்த வன்முறைச் சம்பவமும் நடைபெறாத ஒரேயொரு தேர்தலாக நாம்வெற்றியீட்டிய ஜனாதிபதித் தேர்தலாக வரலாற்றில் இணைக்க முடிந்துள்ளது.

இது நமது நாட்டு மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையைஉறுதிப்படுத்துகிறது. இந்த நிலைமையை உறுதிப்படுத்தி நிலைப்படுத்துவதுஎமது நோக்கமாகும். அரசியலில் அதிகாரத்தைப் பெறுவதற்கு நடவடிக்கைமேற்கொள்வதற்கும் அதற்காக வியூகம் அமைப்பதற்கும் எவருக்கும்உரிமையுள்ளது.

அரசியல் செய்யும் நேரத்தில் அரசியல் செய்வதற்கும், நாட்டைக் கட்டியெழுப்பவேண்டிய நேரத்தில் அதற்காக ஒன்றிணைந்து செயற்படுவதன்முக்கியத்துவத்தையும் இந்த தருணத்தில் வலியுறுத்துகிறேன். அதற்கானதலைமைத்துவத்தை நாம் வழங்குகிறோம்.

சிங்களவராக இருந்தாலும், தமிழராக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும், பேர்கராக இருந்தாலும், மலேயராக இருந்தாலும், இவர்கள் அனைவருக்கும் “நாம்இலங்கைப் பிரஜைகள்” என்று பெருமையுடன் வாழக்கூடியநடைமுறைச்சாத்தியமான ஒரு நாடு உருவாகும் வரை, இந்த நாடுதோல்வியடையுமே தவிர வெற்றியடையாது. அதற்காக அரசியலமைப்புரீதியான,பொருளாதார.அரசியல் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள ஒரு போதும்நாம் பின்வாங்க மாட்டோம்.

தனது இனம், தனது மதம், தனது வர்க்கம், தனது சாதி என இந்த நாடு பிரிந்திருந்தகாலத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வந்து, பன்முகத்தன்மையைமதிக்கும் இலங்கை தேசமாக இந்நாட்டைக் கட்டியெழுப்பும் நிலையான, நிரந்தரமான வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பிப்போம்.

இந்த அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்காக அவற்றைசெயல்படுத்த அவசியமான செயற்திறன்மிக்க மற்றும் நேர்மையானஅதிகாரிகளை நியமிக்கும் பல நடவடிக்கைகளை நாங்கள் ஏற்கனவே நிறைவுசெய்துள்ளோம்.

பொதுப் பணிக்கு இடையூறு ஏற்படாத மற்றும் பிரஜைகள் தொடர்பில் பாதகமானஅழுத்தங்கள் ஏற்படாத வகையில் , எதிர்பார்த்த மாற்றங்கள் படிப்படியாகமேற்கொண்டு நாம் முன்னோக்கிச் செல்வோம். சட்டத்தை மதிக்கும் நாட்டைஉருவாக்கவும், ஒழுக்கமான சமுதாயத்தை உருவாக்கவும் நாங்கள்அர்ப்பணிப்புடன் உள்ளோம். அனைத்து பிரஜைகளினதும் சமூக பாதுகாப்பைஉறுதி செய்வோம்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற எண்ணக்கருவை மீள உயிர்ப்பிப்போம். எமது நாட்டை கட்டியெழுப்புகையில் அரச சேவைக்கு பாரிய பங்கு இருக்கிறதுஎன்பதை நம்புகிறோம். பொது மக்களை கண்ணியமாக நடத்தும் அரசாங்கத்தின்இலக்குகளை நோக்கிச் செல்லும் அரச சேவையை உருவாக்குவோம்.

செயற்திறன் மிக்க, நேர்மையான மற்றும் ஜனரஞ்சகமான அரச சேவையைஉருவாக்க நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். இந்நாட்டு மக்களின்வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே எமது எதிர்பார்ப்பு. அதற்கானநடைமுறைச்சாத்தியமான வேலைத்திட்டம் எங்களிடம் உள்ளது. மக்கள் மீதுஏற்றப்பட்டுள்ள அதிக வாழ்க்கைச் சுமையை குறைப்பதற்கு நாம் நடவடிக்கைஎடுப்போம்.

இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு தாய்க்கும் தந்தைக்கும் தங்கள் பிள்ளைகளின்எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படும் நிலை ஏற்பட இடமளிக்க மாட்டோம். தமதுபிள்ளைக்கு நல்ல பாடசாலை மற்றும் சிறந்த கல்வியை வழங்க அந்த ஒவ்வொருபெற்றோருக்கும் உரிமை உண்டு.

அனைத்து பிள்ளைகளுக்கும் சிறந்த கல்வியை வழங்கவும், அடுத்ததலைமுறையை பாதுகாக்கவும் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். அறிவு,திறன்,மனப்பாங்கு என்பவற்றை மேம்படுத்தி இளைஞர் சமூகத்திற்குநம்பிக்கை ஏற்படக் கூடிய எதிர்காலத்தை உருவாக்குவோம். எந்த நாட்டிற்கு நாம்சென்றாலும், விமான நிலையத்தின் தன்மையை வைத்து அந்த நாடு குறித்து ஒருகண்ணோட்டைத்தை உருவாக்க முடியும்.

அதன் ஒழுங்கு, மக்களின் நடத்தை,செயல்பாடு, போன்றவற்றின் மூலமும்மறைமுகமாக அந்த நாட்டின் இயல்பு எடுத்துக் காட்டப்படுகின்றது. அதையும்தாண்டி சுற்றுச்சூழலின் தூய்மை, வீதிகளில் வாகனங்கள் செல்லும் விதம், முதியோர்களை நடத்தும் விதம், விருந்தோம்பல் செய்யும் முறை, விலங்குகள்எப்படி நடத்தப்படுகின்றன என்பதையும் உறுதிப்படுத்த முடியும். நம் நாட்டின்பிம்பத்தை அதே வகையில் தெளிவாக தெரியும் வகையில் கட்டியெழுப்ப நாம்திட்டங்களை தயாரித்து முடித்துள்ளோம்.

அந்த உருவாக்கத்திற்காக குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்ட காலநடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த நாட்டின் கடவுச்சீட்டை உலகமே மதிக்கும்நிலைக்கு, நாம் நாட்டை கட்டியெழுப்புவது அவசியம். இந்த நாட்டின்பிரஜைகளுக்கு ‘நான் இலங்கையர்‘ என்று பெருமையுடன் கூறக்கூடிய நாட்டைஉருவாக்குவது அவசியம்.

இந்த நாட்டின் பிரஜையாக இருப்பது பெருமை என்று நம் நாட்டு மக்கள் உணரும்வகையில் இந்த நாட்டை உருவாக்குவது அவசியம். அதற்கு உங்களின் கூட்டுப்பங்களிப்பு தேவை. அனைத்து பிரஜைகளுக்கும் சமூக நீதியை நிறைவேற்றும்அரசொன்றை உருவாக்க நாம் பொறுப்புடன் பங்களிக்கிறோம்.

அறிவு, திறன்கள், கல்வி மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றை ஊக்குவிக்கும்வேலைத்திட்டத்தின் மூலம் எமது சிறுவர்கள் மற்றும் இளைஞர் சந்ததிக்குநம்பகமான எதிர்காலத்தை நாம் கட்டியெழுப்புவோம். நமது நாட்டின்சனத்தொகையில் ஐம்பத்திரண்டு வீதத்தைத் தாண்டிய பெண்கள் சமூகம், இந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூகச் செயல்பாட்டிற்கு பெரும்பங்களிப்பைச் செய்யும் குழுவாகும். பெண்கள் பிரதிநிதித்துவம் தொடர்பாகஅனைவரும் ஒன்றிணைந்து எடுக்கக்கூடிய நடவடிக்கைகளுக்கு நாம்செல்வோம்.

சகல நிறுவனங்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை பலப்படுத்துவதற்குநாம் செயற்படுவோம். அதற்கான எமது அர்ப்பணிப்பின் முன்னுதாரணத்தைவெளிப்படுத்தும் வகையில் ஏற்கெனவே எமது பிரதமர் பதவிக்கு பெண் ஒருவரைநியமித்துள்ளோம். எமது சனத்தொகையில் பெருந்தொகையானோர் ஊனமுற்றுவிசேட சமூக பாதுகாப்பு கிடைக்க வேண்டியவர்களாகும். அவர்களுக்காகபலமான சமூக பாதுகாப்பு கட்டமைப்பொன்றை நாம் திட்டமிட்டுள்ளதோடு அதன்குறுங்கால நடவடிக்கையை விரைவாக ஆரம்பிப்போம்.

நாம் செல்லும் பயணத்தில் சமூக கட்டமைப்பின் எந்தவொரு பகுதியையும்கைவிடப்போவதில்லை என்பதற்கு நாம் பொறுப்பு கூறுகிறோம். ஒவ்வொருவரினதும் தனித்துவத்திற்கு மதிப்பளித்து அவற்றை நாட்டின்முன்னேற்றத்துக்காக சாதகமான முறையில் பயன்படுத்திக்கொள்ள எமதுபங்களிப்பை வழங்குவோம்.

மக்கள் இறைமைக்கு மதிப்பளிக்கும் அதேநேரம், அவர்களின் ஜனநாயகஉரிமைகளை பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்போம். எம் மீதான சந்தேகம்காரணமாக நிச்சயமற்ற நபர்கள் இருப்பதை நாம் அறிவோம். எனதுசெயற்பாடுகளின் ஊடாக உங்களின் நம்பிக்கையை வெல்ல எதிர்பார்க்கிறேன். உங்களுடைய விமர்சனங்களை பொறுத்தமான தருணத்தில் ஏற்றுக்கொள்வேன்.

அதேபோல் நாங்கள் கட்டியெழுப்ப போகும் எதிர்காலத்தின் பங்குதாரர்களாகஉங்களை வலுவூட்டுவோம். எமக்கிடையில் காணப்படும் வேறுபாடுகளை கலையமுடியுமானால்,நமக்கிடையிலான இலக்கு சமமானவை என நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள் என நான் நம்புகிறேன்.

அதன் ஊடாக நாடு முகங்கொடுத்துள்ள நெருக்கடியை ஏற்றுக் கொள்ளவும் அதன்ஊடாக முன்னோக்சிச் செல்வதற்குத் தேவையான மூலோபாயங்களை இணைந்துதிட்டமிடவும் முடியும். இந்த நாட்டை கட்டியெழுப்வுதற்காக காத்திரமாகவும்நேர்மையாகவும் இணையும் அனைவருக்கும் எமது கதவுகள் திறந்துள்ளன.

மக்களின் ஆணைக்கு அமைவான பாராளுமன்றம் ஒன்று அவசியப்படுகிறது. இறுதியாக இருந்த பாராளுமன்றம் மக்கள் ஆணையை திரிபுபடுத்தியதாககாணப்பட்டது. அதனால் நேற்றைய தினம் பாராளுமன்றத்தை கலைக்கநடவடிக்கை எடுத்தேன்.

அரசியலமைப்புக்கு அமைவாக நாட்டை கொண்டு செல்வதற்காக எமதுபாராளுமன்ற பிரநிதித்துவத்திற்கு அமைவாக அமைச்சரவை ஒன்றைநியமித்தேன். அன்றாடம் சூரியன் உதிக்கும் ஒவ்வொரு பொழுதிலும் மக்கள்காணும் கனவுகள் உள்ளன.

அது இன்று இருப்பதை விடவும் சிறந்த நாடாகும்! ஆனாலும், பல வருடங்களாகஅது கனவாகவே போய்விட்டது என்பதையும் நானும் அறிவேன். சந்தர்ப்பவாதம், அதிகாரமோகம்,சர்வாதிகாரம் மற்றும் இனவாதம் காரணமாக எமது நாட்டைமேலும் உயர்த்தி வைக்க எம்மால் முடியாமல் உள்ளது..! இருப்பினும், எமக்குவரலாற்றில் நழுவவிட முடியாத சந்தர்ப்பமொன்று கிடைத்திருக்கிறது. நாம்அனைவரும் ஒன்றிணைந்து பல்வகைத்தன்மையை ஏற்றுக்கொள்ளும்செழிப்பான நாட்டை கட்டியெழுப்புவோம்.

You Might Also Like

இலஞ்சம் பெற்ற தரகர் கைது!

விளக்கமறியலில் முன்னாள் கடற்படைத் தளபதி

நாமல் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!

மாகாணசபை தேர்தலை நடத்துங்கள் – பவ்ரல் !

பாடசாலை நேர மாற்றம்: தினசரி இரண்டு இடைவேளைகள் வழங்க பரிந்துரை

அம்பாளின் ஆடிப்பூரம் இன்றாகும்!

பதிவுச் சான்றிதழ் எந்த காலத்திற்கும் செல்லுபடியாகும் – புதிதாக எடுக்கவேண்டிய அவசியமில்லை !!

சர்வதேச விமான நிலையங்களில் பனைவள பொருட்கள் காட்சிக்கு நடவடிக்கை – அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு

SUB EDITOR September 25, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் அறிவிப்பு !
Next Article வேலணை பிரதேச சபையினால் இன்று கடற்கரை பிளாஸ்ரிக் சேகரிப்பு.
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தனின் மகோற்சவம் நாளை ஆரம்பம்
இலஞ்சம் பெற்ற தரகர் கைது!
விளக்கமறியலில் முன்னாள் கடற்படைத் தளபதி
நாமல் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!

You Might Also Like

இலங்கைச் செய்தி

இலஞ்சம் பெற்ற தரகர் கைது!

July 28, 2025
இலங்கைச் செய்தி

விளக்கமறியலில் முன்னாள் கடற்படைத் தளபதி

July 28, 2025
இலங்கைச் செய்தி

நாமல் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!

July 28, 2025
இலங்கைச் செய்தி

மாகாணசபை தேர்தலை நடத்துங்கள் – பவ்ரல் !

July 28, 2025
இலங்கைச் செய்தி

பாடசாலை நேர மாற்றம்: தினசரி இரண்டு இடைவேளைகள் வழங்க பரிந்துரை

July 28, 2025
இலங்கைச் செய்தி

அம்பாளின் ஆடிப்பூரம் இன்றாகும்!

July 28, 2025
இலங்கைச் செய்தி

பதிவுச் சான்றிதழ் எந்த காலத்திற்கும் செல்லுபடியாகும் – புதிதாக எடுக்கவேண்டிய அவசியமில்லை !!

July 27, 2025
இலங்கைச் செய்தி

சர்வதேச விமான நிலையங்களில் பனைவள பொருட்கள் காட்சிக்கு நடவடிக்கை – அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு

July 26, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?