இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை, விலைவாசி உயர்வு மற்றும் வரவிருக்கும் புதிய வரவு – செலவுத்திட்டம் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (31/10) நாட்டு மக்களுக்கு மிக முக்கியமான விபரங்களை வெளியிட்டுள்ளார்
புதிய பட்ஜெட்டில் மேலும் வரிக்குறைப்பு உறுதி!
நாம் ஆட்சிக்கு வந்த பிறகு புதிய வரிகள் எதையும் மக்கள் மீது திணிக்கவில்லை. மாறாக, ஏற்கனவே இருந்த சில வரிகளை கணிசமாகக் குறைத்துள்ளோம்.
அரசாங்கத்தின் வருவாய் இலக்குகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், வரவிருக்கும் புதிய பட்ஜெட்டில் மேலும் சில வரிகளைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளோம்.
முந்தைய ஆட்சிகளை முறியடித்த வருவாய் சாதனை!
கடந்த கால அரசாங்கங்கள் தாங்கள் திட்டமிட்ட வருவாய் இலக்குகளை எட்ட முடியாமல், எப்போதும் 90% மட்டுமே வருவாயைத் திரட்டித் தோல்வியடைந்தன.
ஆனால், நமது தற்போதைய நிர்வாகம் எதிர்பார்த்த வருவாய் இலக்குகளைத் தாண்டிச் சாதித்துள்ளது. அத்துடன், நாட்டின் கடன் சுமையைக் காலப்போக்கில் குறைக்கும் நோக்கில் ஒரு நிலையான பட்ஜெட் உபரியைப் பேணி வருகிறோம்.
விலைவாசி உயர்வு மற்றும் சர்வதேசப் பின்னணி!
நாட்டில் அதிகரித்து வரும்பணவீக்கம் காரணமாகப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை உயர்ந்து, நடுத்தரக் குடும்பங்களுக்குக் கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளதை நான் நன்கு அறிவேன்.
இந்த பணவீக்க அழுத்தத்திற்கு உள்நாட்டு கொள்கைகள் காரணமல்ல:
தற்போதைய மத்திய கிழக்கு நாடுகளின் மோதல்களும் சர்வதேச விநியோக வழித்தடங்களில் ஏற்பட்டுள்ள தடைகளுமே பிரதானக் காரணங்களாகும். இந்த உலகளாவிய நெருக்கடியை முறியடித்து விலைவாசியைக் கட்டுப்படுத்த அரசு தீவிரமாக உழைத்து வருகிறது.
கல்விமான்கள் மற்றும் புலம்பெயர் மக்களின் பங்களிப்பு!
நாட்டின் எதிர்காலக்கொள்கைகளை வகுப்பதிலும், புதியதொரு தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை கட்டியெழுப்புவதிலும் உள்நாட்டு நிபுணர்கள் மற்றும் கல்விமான்களின் பங்களிப்பு மிக அவசியமானது.
மக்களின் வரலாற்றுப் பெருவாரியான நம்பிக்கையைப் பாதுகாத்து, முறைகேடுகளற்ற ஒரு பலமான பொருளாதாரத்தை நோக்கி இலங்கை பயணிக்கும்.