இலங்கையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ஏற்பாடுசெய்யப்பட்ட ‘2025 ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கல்’ நிகழ்வு நேற்றுகாலை (23) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டுமண்டபத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில்நடைபெற்றது.
சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கு சிறந்த பங்களிப்பு வழங்கிய கைத்தொழில்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், ஊடகநிறுவனங்கள், சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும்பாடசாலைகள் மற்றும் சமூகப் பங்களிப்பை வரவேற்கும் வகையில் நாட்டில்சுற்றுச்சூழலுக்கு உகந்த கைத்தொழில்கள், வர்த்தகங்கள் மற்றும் சேவைக்கலாசாரத்தை கட்டியெழுப்புதல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில்செயல்படுவதற்காக சமூகத்தை ஊக்குவித்தல் மற்றும் நிலைபேறானஅபிவிருத்திக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகியநோக்கத்தில் மத்திய சுற்றாடல் அதிகார சபையால் ஜனாதிபதி சுற்றாடல் விருதுவழங்கல் நிகழ்வு ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கல் நிகழ்வு , ‘ அழகான நாடு – புன்னகைக்கும் மக்கள்‘ என்ற நோக்குடன் செயல்படுத்தப்படும் கிளீன்ஸ்ரீலங்கா திட்டத்துடன் இணைந்ததாக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது விசேடஅம்சமாகும். ‘சுற்றுச்சூழலுக்கு உகந்த கைத்தொழில் பிரிவு‘, ‘சுற்றுச்சூழலுக்குஉகந்த அரச நிறுவன பிரிவு‘, ‘சுற்றுச்சூழலுக்கு உகந்த தனியார் துறை பிரிவு ‘, ‘சுற்றுச்சூழலுக்கு உகந்த பாடசாலைகள்‘, ‘புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திதிட்ட பிரிவு‘, ‘சுற்றுச்சூழலுக்கு உகந்த புத்தாக்கப் பிரிவு‘, ‘சுற்றுச்சூழல்பாதுகாப்புக்காக செயல்படும் அரச சார்பற்ற நிறுவன பிரிவு‘, ‘ஊடக பிரிவு‘ மற்றும் ‘சமூக ஊடக பிரிவு ‘ ஆகிய 9 பிரிவுகளின் கீழ் மொத்தம் 132 விருதுகள்வழங்கப்பட்டன.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தங்க விருதுகளை வழங்கி வைத்தார். அதே நேரத்தில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர்திலக் ஹேவாவசம் மற்றும் பணிப்பாளர் நாயகம் கபில மகேஷ் ராஜபக்ஷஆகியோர் சுற்றுச்சூழல் நட்பு நினைவுப் பரிசொன்றை ஜனாதிபதிக்குவழங்கினர்.
விருது வழங்கும் விழாவைத் தொடர்ந்து , விருது பெற்றவர்களுடன் குழுபுகைப்படத்திலும் ஜனாதிபதி இணைந்து கொண்டார்.