சேமிப்பில் தெல்லிப்பளை பிரதேச செயலகம் தேசிய ரீதியில் சாதனை!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

புகைத்தல் ஒழிப்பு தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டிற்குரிய விசேட கொடிதின, சேமிப்பு வாரத்தை முன்னிட்டு, கடந்த 31.05.2023 ஆம் திகதி முதல் 14.06.2023 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட சேமிப்பில் தெல்லிப்பளை பிரதேச செயலகம் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தினையையும் பெற்றுக் கொண்டுள்ளது.

சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர்களினால் சேமிக்கப்பட்ட இந்தப் சேமிப்புப் பணம் முழுவதும் மிகவும் வறுமையான மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக செலவு செய்யப்படவுள்ளது.

கொடி தினத்தை முன்னிட்டு 4,772,090.00 ரூபா சேகரிக்கப்பட்டுள்ளதுடன் இந்தப் சேமிப்புப் பணம் முழுவதும் மிகவும் வறுமையான மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக செலவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article