செல்வச் சந்நிதி ஆலயத்தில் மற்றுமொரு குடும்பஸ்தர் மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் மேலும் ஒரு குடும்பஸ்தர் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

சமரபாகு, மாவடியைச் சேர்ந்த 51 வயதுடைய சுந்தரம் மோகன்ராஜ் என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

சமரபாகு பகுதியிலிருந்து செல்வச் சந்நிதி ஆலயத்திற்கு காவடி எடுத்துச் சென்றவர்களுடன் நடந்து சென்ற மேற்படி குடும்பஸ்தர் ஆலயத்தில் நேற்றுமுன்தினம் (ஓகஸ்ட் 30) இரவு 7.00 மணியளவில் மயங்கவிழுந்துள்ளார்.

இதையடுத்து மோட்டார் சைக்கிளில் ஏற்றி வீட்டுக்கு கொண்டு செல்கின்றபோது இடையில் மீண்டும் மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது முன்னதாகவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

செல்வச் சந்நிதி ஆலய திருவிழா காலத்தில் இடம்பெற்ற இரண்டாவது உயிரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Article