யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள புதைகுழிகளில் நேற்று(ஜூலை 21) அடையாளம் காணப்பட்டுள்ள 07 மனித எலும்பு கூட்டு தொகுதிகளுடன் சேர்த்துமொத்தமாக 72 எலும்பு கூட்டு தொகுதிகள் இங்கே கண்டெடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01″ மற்றும்“தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02″ என நீதிமன்றினால்அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள்முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால்அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் முதல் 15 நாட்கள் தொடர்ச்சியாக அகழ்வுபணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் கடந்த 10ஆம் திகதியுடன் தற்காலிகமாகஇடை நிறுத்தப்பட்டு 11 நாட்களின் பின்னர் நேற்றைய தினம் (ஜூலை21) 16ஆவது நாளாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
அதன் போது இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் 07 எலும்பு கூட்டுதொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றினை இன்றையதினம்செவ்வாய்க்கிழமை அகழ்ந்து எடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
மனிதப்புதைகுழி தொடர்பான விசாரணைகள் இதுவரை யாழ்ப்பாணம்பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், பொலிஸ்மா அதிபரின்உத்தரவுக்கு அமைய, இந்த விசாரணைகளை மத்திய குற்றப் புலனாய்வுப்பிரிவின் கீழ் ஒப்படைக்கபட்டுள்ள நிலையிலையே குற்றப்புலனாய்வுத்திணைக்கள அதிகாரிகள் அகழ்வு இடம்பெறும் இடத்தில் பிரச்சன்னமாகிஇருந்தமை குறிப்பிடத்தக்கது.