By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: சீருடையை வழங்கிய சீனா!
Share
Notification
Latest News
யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
யாழ்ப்பாணம்
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
யாழ்ப்பாணம்
நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!
தீவகச் செய்தி
வரலாற்று சிறப்பு மிக்க நயினை நாகபூசணிக்கு ஏறியது கொடி!
தீவகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > சீருடையை வழங்கிய சீனா!
இலங்கைச் செய்தி

சீருடையை வழங்கிய சீனா!

Last updated: 2024/12/11 at 8:56 AM
Published December 11, 2024 129 Views
Share
2 Min Read
SHARE

2025 ஆம் ஆண்டிற்கான நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும்பிரிவெனாக்களின் பிள்ளைகளுக்கும் சீருடைகளை வழங்கியமைக்காக சீனஅரசாங்கத்திற்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிப்பதாகபிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

சீன அரசாங்கத்தின் உதவித்திட்டமாக கிடைக்கப்பெற்ற இந்த பாடசாலைசீருடைகளை சீனத் தூதுவர் நேற்றையதினம் (டிசம்பர் 10) பிற்பகல் கொழும்புதுறைமுகத்தின் சர்வதேச கொள்கலன் முனையத்தில் கல்வி, உயர்கல்வி மற்றும்தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம்கையளித்தார்.

2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளுக்காக 11,817 மில்லியன் மீற்றர்துணி தேவையாகவுள்ளதுடன், பாடசாலை சீருடைகள் வழங்கப்படவுள்ளமாணவர்களின் எண்ணிக்கை 4,640,086 ஆகும். அதன்படி, 2025 ஆம்ஆண்டிற்கான பாடசாலை சீருடைகளின் முழுத் தேவையும் சீன மக்கள்குடியரசால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சீருடை துணிகள் மூன்று தொகுதிகளாக இலங்கையைவந்தடையவுள்ளதுடன், முதலாவது மற்றும் இரண்டாவது தொகுதிகள் ஏற்கனவேஇலங்கையை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். மூன்றாவது தொகுதிடிசம்பர் 25 ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளது.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

கல்வி எமது நாட்டிற்கு மிகவும் முக்கியமானது, எமது அரசாங்கம் கல்விக்கு அதிகமுன்னுரிமை அளித்து வருகிறது. நாம் அபிவிருத்தி அடைய கல்வி ஒரு அடிப்படைவழிமுறையாகும். எந்தவொரு சமூக–பொருளாதார வேறுபாடு அல்லதுஅந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து பிள்ளைகளும் கண்ணியத்துடன்கல்வியை அணுக கல்வியில் முதலீடுகள் செய்யப்பட வேண்டும். அதற்கான பலமுன்மொழிவுகளை நாங்கள் ஏற்கனவே முன்வைத்துள்ளோம்.

பாடசாலை சீருடைக்கான பொருட்களை வழங்குவதில் சீனாவின் பெருந்தன்மைஎங்களுக்கு மிகவும் முக்கியமானது, இல்லாவிட்டால் இதற்கான நிதியை நாங்கள்தேட வேண்டியிருக்கும். 2025 ஆம் ஆண்டில், நமது நாட்டில் உள்ள அனைத்துபாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் உள்ள அனைத்து பிள்ளைகளுக்கும்சீருடை வழங்கும் பணியை சீனா மேற்கொண்டுள்ளது. இது சீனாவிடமிருந்துகிடைக்கும் முக்கியமான நன்கொடை என்றும், இதற்கு அரசாங்கம் நன்றிதெரிவிப்பதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, தூதரக அதிகாரிகள், கல்வி அமைச்சின் அதிகாரிகள், துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவை அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்டோர்இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

You Might Also Like

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

SUB EDITOR December 11, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article கைது செய்யப்பட்ட கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் விளக்கமறியலில் !
Next Article நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையிலான போக்குவரத்து நிறுத்தம்!!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!

You Might Also Like

இலங்கைச் செய்தி

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

June 26, 2025
இலங்கைச் செய்தி

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

June 23, 2025
இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

June 20, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?