சீனி மோசடி தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நாட்டில் வெள்ளை சீனியை சிகப்பு சீனியாக மாற்றும் மோசடி குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தெனியாய ஹான்போட் பிரதேசத்தில் நீண்ட காலமாக சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய வகையில் வெள்ளை சீனியை சிகப்பு சீனியாக மாற்றும் தொழிற்சாலையொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

குறித்த தொழிற்சாலை மற்றும் களஞ்சியசாலையில் இருந்து 2000 கிலோ கிராம் நிறையுடைய சீனி மீட்கப்பட்டுள்ளது.

இதற்காக பயன்படுத்தப்பட்ட இயந்திர சாதனங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதற்கமைய சீனியில் கலப்படம் செய்வதற்காக சீமெந்து பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சுற்றிவளைப்பின்போது சீமெந்து கலவை, தராசு, எரிவாயு அடுப்பு உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share this Article