நெடுந்தீவு மத்தி சீக்கிரியாம் பள்ளம் அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டு 60வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நேற்றைய தினம் (ஜீலை 26) புனித யாகப்பர் ஆலயத்தில் நிளைவு நிகழ்வுகள் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக இடம் பெற்றது.
கொரோனா தாக்கத்தினால் பாடசாலை முதலில் ஆரம்பிக்கப்பட்ட புனித யாகப்பர் ஆலயத்தில் ஏற்பாட்டுக்குழுவினால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வு நெடுந்தீவு பங்குத் தந்தையின் ஆசியுரையுடன் ஆரம்பமாகியது.
இந்நிகழ்வில் கடந்த காலங்களில் கல்வி கற்றவர்களது அனுவப பகிர்வுகள், கருத்துலைகள் இடம் பெற்றதுடன் இவ் வித்தியாலயத்தின் ஆரம்ப ஆசிரியரான திருமதி அடைக்கலமுத்து அருளம்மா அவர்களுக்கு வாழும் போதே வாழ்த்துவோம் எனும் தொனியில் கௌரவம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து 60வது ஆண்டு நிகழ்வினை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டி நிகழ்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
கொரோனா பாதுகாப்பு நிலைமையினைக் கருத்திற் கொண்டு பாதுகாப்புடன் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலேயே நிகழ்வுகள் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் நெடுந்தீவு பங்குத்தந்தை அவர்கள், நெடுந்தீவு கோட்டக்கல்வி அதிகாரி, சீக்கிரியாம் பள்ள வித்தியாலய அதிபர் உதய சூரியன் விளையாட்டுக்கழக அங்கத்தவர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.