சிவப்பு எச்சரிக்கை வந்தமைக்காக மின்சார நிலையத்தில் தாக்குதல்!- ஒருவருக்குக் காயம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

தமது வீட்டுக்கு சிவப்பு எச்சரிக்கைத் துண்டு (ரெட் நோட்டீஸ்) வந்தமைக்காக, மின்சார நிலையத்துக்குச் சென்று வாக்குவாதம் செய்த இருவர், மின்சார நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதலும் நடத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் வட்டுக்கோட்டை மின்சார நிலையத்தில் நேற்று(ஜூலை 6) இடம்பெற்றுள்ளது.

சிவப்பு எச்சரிக்கைத் துண்டு தொடர்பில், மின்சார நிலைய ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் அவர்கள் ஈடுபட்டபோது அவ்விடத்துக்கு வந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் அவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தபோதே அவர் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திவர்கள் மதுபோதையில் இருந்தனர் என்றும் பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான பாதுகாப்பு ஊழியர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

Share this Article