சிறையில் இருந்து வெளியே வந்தவர் மீண்டும் பொலிசாரால் கைது!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வாளுடன் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் நேற்றுமுன்தினம் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் சகோதரனுடன்இணைந்து மீண்டும் ஒரு வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட நிலையில் இருவரும்பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலிகோவில் பகுதியில் இந்தசம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. நீண்ட காலமாக இருந்துவந்தகாணி தகராறு காரணமாகவே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது.

கூரிய ஆயுதத்தால் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த நபர் வட்டுக்கோட்டைபிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம்போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தாக்குதல் நடத்திய இருவரையும் வட்டுக்கோட்டை பொலிசார் கைது செய்துவிசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share this Article