முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களமும்இணைந்து நடாத்திய முல்லைத்தீவு மாவட்ட மாபெரும் தொழிற்சந்தைஇன்றையதினம் (டிசம்பர் 05) இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்கள் மாவட்டசெயலகத்தில் அமைக்கப்பட்டிருந்த தொழிற்சந்தை வளாகத்தின் நாடாவினைவெட்டி வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
தொழில் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்த்தல் ,தனியார் உற்பத்தி நிறுவனங்கள், சந்தைப்படுத்தல் துறை , கொட்டேல் துறை, காப்புறுதித்துறை, ஆடை உற்பத்திதுறை , விவசாயத்துறை , தாதியர் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் பயிற்சிபாடநெநிகள் பற்றிய தகவல்கள் முதலானவை தொடர்பில் தொழில்நிறுவனங்களும் தொழில் வல்லுநர்களும் வழிகாட்டல் செயல்முறையினைமுன்னெடுத்தனர்.
இந்த நிகழ்வில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன், உதவிமாவட்டச் செயலாளர் லிசோ கேகிதா, மனித வலு வேலைவாய்ப்புத்திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் , ஏனைய உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.