யாழ் மாவட்டச் செயலகமும் விதாதா பிரிவும் இணைந்து நடாத்திய மாவட்ட வர்த்தக சந்தையும் விற்பனை கண்காட்சியும் இன்றைய தினம் (01.07) யாழ் மாவட்ட செயலக வளாகத்தில் நடைபெற்றது.

இக் கண்காட்சியினை பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நாடா வெட்டி ஆரம்பித்து வைத்தார்.
இந் நிகழ்வில் உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் வகையிலும் தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கிலும் அவர்களுக்கான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாகவும் இக் கண்காட்சி அமைந்திருந்தது

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், யாழ் வணிகர் கழகத்தின் தலைவர் இ. ஜனத்குமார், பிரதம கணக்காளர் எஸ்.கிருபாகரன், உள்ளிட்ட மாவட்டச் செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், மாகாண திணைக்களத்தின் அதிகாரிகள், மாவட்ட பிரதேச செயலக விதாதா உத்தியோகத்தர்கள், உள்ளூர் உற்பத்தியாளர்கள், எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.