நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனமும் அற்புதம் அறக்கட்டளையும் இணைந்து கலைக்கோவில் நுண்கலைக்கல்லூரி (கனடா) ஊடாக நெடுந்தீவு மண்ணில் நடத்தும் நுண்கலைக் கற்கை நெறிகளான நடனம், மிருதங்கம், புல்லாங்குழல் ஆகியவற்றின் ஆரம்ப நிகழ்வு இன்று (ஜூன் 25) மாலை றோ. க. மகளிர் கல்லூரி மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
நெடுந்தீவு பாடசாலைகளில் உள்ள நுண்கலையில் ஆர்வமுடைய மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
கலைக்கோவில் நுண்கலைக்கல்லூரி (கனடா) இன் நிறுவுனர் வனிதா குகேந்திரன் அவர்களின் தந்தையார் இ. பேரம்பலம் அவர்கள் இன்றைய ஆரம்ப நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நுண்கலைக் கற்கை நெறிகளில் இணையும் மாணவர்களுக்கான சில உபகரணங்கள் , அணிகலன்கள் இன்றையதினம் வழங்கப்பட்டுள்ளதுடன் தொடர்ச்சியாக இடம்பெறும் பயிற்சிநெறியில் இணையும் மாணவர்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படவுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
இன்றைய ஆரம்ப நிகழ்வில் பாடசாலை அதிபர்கள் , ஆசிரியர்கள், நலன் விரும்பிகள் மற்றும் நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவன உறுப்பினர்கள் , மாணவர்கள் என பலர் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.