சித்தங்கேணி இளைஞன் உயிரிழப்பு!- மேலும் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் ஏற்கனவே இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதுடன்  மேலும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் கடமையில் இருந்தார்கள் என்ற ரீதியில் இவ்வாறு குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இளைஞன் உயிரிழப்பதற்கு முன்னர் வெளியிட்ட காணொளியில் பொலிஸ் நிலையத்தில் தனக்கு இடம்பெற்ற சித்திரவதைகள் குறித்து கூறியிருந்தார்.

இந்த காணொளியை பார்வையிட்ட பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article