சிகிச்சைக்காக நெடுந்தீவில் அனுமதிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் குமுதினி படகின் மூலம் குறிகட்டுவானுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கச்சதீவுக்கு அண்மையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது, படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் காப்பாற்றப்பட்ட இரண்டு இந்திய மீனவர்களை நேற்று (ஆகஸ்ட் 28) யாழ் இந்திய துணைத் தூதரகத்திற்கு ஒப்படைத்துள்ளனர்.

நான்கு மீனவர்களை கொண்டு மீன்பிடியில் ஈடுபட்ட அந்தப் படகு, நேற்றுமுந்தினம் (ஆகஸ்ட் 27) நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர், இரண்டு மீனவர்களை மீட்டு, காணாமல் போன மற்ற இரண்டு மீனவர்களை தேடும் பணியில் உள்ளனர்.

இந்த நிலையில், மீட்கப்பட்ட இரு மீனவர்களும் நேற்றுமுந்தினம் நெடுந்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, சிகிச்சைக்காக நெடுந்தீவு பிரதேசவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், நேற்று (ஆகஸ்ட் 28) குமுதினி படகின் மூலம் குறிகட்டுவானுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு இருந்து யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரகத்திற்கு ஒப்படைக்கப்பட்டனர். இன்று (ஆகஸ்ட் 29) அவர்களை பலாலி விமான நிலையம் மூலம் இந்தியாவிற்குக் கொண்டு செல்லும் நடவடிக்கைகள் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரகம் மேற்கொண்டு வருகிறது.

Share this Article