சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அநுர குமார பயணிக்கும் இரண்டு உலங்கு வானூர்திகள்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, தற்போது இரண்டு உலங்குவானூர்திகளைப் பயன்படுத்தி பயணம் செய்வதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் குற்றம் சுமத்தியுள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்

ஒரு நாட்டை நிர்வகிப்பதற்கு வாகனங்கள் மிக அவசியம். வாகனங்கள் இல்லாமல் அரசாங்கத்தின் பணிகளை முன்னெடுக்க முடியாது.

ஆனால், இன்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இரண்டு உலங்குவானூர்திகளைப் பயன்படுத்தி பயணம் செய்து வருகின்றார்.

முன்னர் அநுர குமார எதிர்க்கட்சியில் இருக்கும்போது, அரசாங்கத்தைப் பார்த்து “ஒரு உலங்குவானூர்தியில் இருந்து மற்றொரு உலங்குவானூர்திக்கு தாவிச் செல்வதற்கா இரண்டு உலங்குவானூர்திகளை பயன்படுத்துகின்றீர்கள்” என கேள்வி எழுப்பினார்.

ஆனால், இன்று எந்தவிதமான வெட்கமும் இன்றி இரண்டு உலங்குவானூர்திகளைப் பயன்படுத்தி நாடு முழுவதும் பயணம் செய்கின்றார்.

நாட்டுக்கு வாகனங்கள் அவசியம் என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு புதியவர்கள் விரும்பவில்லை எனக் கூறிய அரசாங்கம், அந்த வாகனங்களை ஏன் விற்பனை செய்தது?

அந்த வாகனங்களை ஏலத்தில் விற்பனை செய்தபோது, தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு மிகவும் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

அதற்குப் பதிலாக வெளிநாடுகளில் இருந்து புதிதாக வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அந்த வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கான கேள்விப்பத்திர நடைமுறையிலும் பிரச்சினைகள் இருப்பதாக எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன

இவ்வாறு மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி அவர்களை ஏமாற்றிய அரசாங்கம், தற்போது எனன் செய்து கொண்டிருக்கின்றது என கேள்வி எழுப்பியுள்ளார். 

Share this Article
Leave a comment