இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபையின் விருது வழங்கும் விழாவானதுநேற்றைய தினம் (15.08) வவுனியா நோர்த்வே ஹோட்டலில் சிறப்பாகநடைபெற்றது.
இதில் இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபையின் ஓய்வூதியத் திட்டத்தில் பணம்சேகரிப்புத் திட்டத்தில் அகில இலங்கை ரீதியாக யாழ்ப்பாண மாவட்டம் முதலிடம்பெற்றமைக்கான விருதினை யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திருமருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
மேலும் பிரதேச செயலக ரீதியில் பணசேகரிப்பு அடிப்படையில் தேசிய ரீதியாகஉடுவில் பிரதேச செயலகம் முதலாம் இடத்தினையும், தெல்லிப்பளை பிரதேசசெயலகம் இரண்டாம் இடத்தினையும், சண்டிலிப்பாய் பிரதேச செயலகம்மூன்றாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டதுடன், பருத்தித் துறை பிரதேசசெயலகம் 1,000 ற்கு மேற்பட்ட அங்கத்தவர்களை இணைத்தற்கான தேசியவிருதும் வழங்கப்பட்டது. இப்பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள் இவ் விருதுகளை நேற்றைய தினம் பெற்றுக் கொண்டனர்.
இந் நிகழ்வானது இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபையின் வடக்கு கிழக்குசிரேஷ்ட இணைப்பாளர் திரு பா. பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.
பிரதம விருந்தினராக இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபையின் கெளரவத்தலைவர் திரு. பி. எஸ். எஸ். டிக்வெலா அவர்களும், சிறப்பு விருந்தினராக சபையின் பொது முகாமையாளர் திரு. கே. ஏ. எஸ். பி. களுராட்சி அவர்களும், கெளரவ விருந்தினராக சபையின் பிரதிப் பொது முகாமையாளரான திருமதிகல்ஹாரி டி. சில்வா அவர்களும், சிறப்பு அழைப்பாளராக சபையின் மேம்படுத்தல் உத்தியோகத்தர் திரு டி. எல். லக்மல் அவர்களும் பங்குபற்றினார்கள்.
வடக்கு கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த அரசாங்க அதிபர்கள், மேலதிகஅரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், சமுர்த்திப் பணிப்பாளர்கள் உட்பட உயர்மட்ட அதிகாரிகள்கலந்துகொண்டார்கள்.