கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புதிய பஸ் சேவை

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை பிரதான புகையிரத நிலையம் மற்றும் மாகும்புர  போக்குவரத்து மத்திய நிலையம் வரையான புதிய சொகுசு பஸ் சேவை நேற்று (ஆகஸ்ட் 15) ஆரம்பமானது.

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், நாட்டிற்குள் பயணிக்க போக்குவரத்து சேவை ஏஜென்சியின் வசதிகளைப் பெறவில்லை என்றால், அவர்கள் விமான நிலையத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அவரிவத்த பேருந்து நிலையத்திற்கு வர வேண்டும்.

இதன்படி, விமான நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த பஸ்கள் இடையில் நிற்காமல் கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை வழியாக செல்லும்.

இந்த புதிய பஸ் சேவையானது, விமான நிலையம், ஏவியேஷன் கம்பெனி லிமிடெட், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் ஒரு தனியார் பஸ் நிறுவனம் ஆகியன இணைந்து நடாத்துகின்றன.

இந்த பஸ் சேவைக்காக 10 சொகுசு பெரிய பஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், ஒரு பயணியிடம் இருந்து 3,000 ரூபாய் வசூலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

Share this Article