சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி முகாமையாளர்களுக்கான மொழிப் பயிற்சிநெறி ஆரம்பம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி முகாமையாளர்களுக்கான  மொழிப் பயிற்சி நெறியானது – அரசகரும மொழிகள் திணைக்களமும் மற்றும் மாவட்ட சமுர்த்தி திணைக்களம்  இணைந்து மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் பொ. சிறிவர்ணன் தலைமையில் இன்றைய தினம் (நவம்பர்01)   கோப்பாய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.

இவ் பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து கொண்டதுடன், மொழிப் பயிற்சி நெறிகளின் அவசியம், யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது நடைபெறுகின்ற மொழிப் பயிற்சி நெறிகள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் சவால்களும்  அதனை நிவர்த்தி செய்யும் வழிமுறைகள் தொடர்பாகவும், எதிர்காலத்தில் மொழிப் பயிற்சி நெறிகள் எவ்வாறு அமைய வேண்டும்  போன்ற விடயங்கள்  தெரிவித்தார்.

இவ் ஆரம்ப நிகழ்வில் கோப்பாய் பிரதேச செயலாளர் தயாரூபன், மாவட்ட சமுர்த்தித் திணைக்கள கணக்காளர் முருகதாஸ், அரசகரும மொழிகள் திணைக்களத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டுப் பிரிவின் வடமாகாண ஒருங்கிணைப்பாளருமாகிய  ந.உமாநாத் மற்றும் அரசகரும  மொழிகள் திணைக்கள வளவாளர் சி.யோகராணி என  பலரும் கலந்து கொண்டனர்.

Share this Article