சண்டிலிப்பாயில் அறநெறிக்கல்வியின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் அறநெறிக்கல்வியின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு நேற்றுமுன்தினம்(ஜூலை 23 ) மாதகல் கிராம அபிவிருத்தி சங்க பொது நோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.

யாழ் மாவட்ட செயலகத்தில் கடந்த 20 ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலுக்கு அமைவாக இது இடம்பெற்றது.

சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் அறநெறிப்பாடசாலை மாணவர்களின் வரவை அதிகரிக்கும் நோக்கில் மாதகல் கருணை வைரவர் ஆலய அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும்  இந்த விழிப்புணர்வு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

நவாலி முருகானந்தா அறநெறிப்பாடசாலை மாணவர்களின் கல்விச் செயற்பாட்டினை முன்னெடுக்கும் வகையில் நால்வர் குருபூஜை நிகழ்வும் இடம்பெற்றது.

Share this Article