சட்ட நடவடிக்கைக்குச் செல்லும் யாழ் பேருந்து நிலைய மலசலகூடம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ் நகரில் மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய மலசலகூட தொகுதியை நிர்வகிப்பதில் இ.போ.ச மற்றும் மாநகரசபை இடையே ஏற்பட்டுள்ள இழுபறி நிலையை அடுத்து அதற்கான தீர்வைக் காண சட்ட ஆலோசனை பெற மாநகரசபை தீர்மானித்துள்ளது.

இன்று (14/05) நடைபெற்ற மாநகரின் மாதாந்தக் கூட்டத்தில் குறித்த விடையம் தொடர்பில் முதல்வர் திருமதி மதிவதனி விடையத்தை முன்வைத்து சட்ட ரீதியான ஆலோசனைக்கான அனுமதி முன்மொழிவை சமர்ப்பித்தார்.

இதேவேளை குறித்த விடையம் சட்ட ஆலோசனை அல்லாது நேரடியாகவே சட்ட நடவடிக்கைக்குச் செல்ல வேண்டும் என உறுப்பினர் ஒருவர் வலியுறுத்தினார்.

ஆனாலும் சட்ட ஆலோசனைபெற்று அடுத்த நடவடிக்கைக்குச் செல்ல சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share this Article