கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளாலிப் பகுதியில் சட்டவிரோதமாகமணல் அகழ்ந்த இரண்டு உழவு இயந்திரங்களை கொடிகாமம் பொலிஸார்கைப்பற்றியுள்ளதுடன் சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (ஒக்.29)அதிகாலை 3.00 மணியளவில்கிளாலிப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கொடிகாமம் பொலிஸார் குற்றங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில்அண்மைக்காலமாக அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் பின்னர் கொடிகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதானபொலிஸ் பரிசோதகர் எஸ் .பி. திஸ்ஸாநாயக்க தலைமையிலான பொலிஸ்குழுவினர் இன்று அதிகாலை குறித்த பகுதிகளில் விசேட சுற்றி வளைப்பைமேற்கொண்டிருந்தனர்.
இதன் போதே சட்டவிரோத மணலுடன் இரண்டு உழவு இயந்திரங்களைக்கைப்பற்றியுள்ளதுடன் ஒருவரைக் கைது செய்துள்ளதுடன் அதேவேளைஏனையவர்கள் தப்பியோடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளைக் கொடிகாமம் பொலிஸார்மேற்கொண்டு வருகின்றனர்.