கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணியை அதன்உரிமையாளர்களிடம் கையளிக்க நீதிமன்றம் உத்தரவு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணியை அதன்உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ள நிலையில், நாளை (ஒக்.15) நீதிமன்றத்தின் மூலம் காணி உரிமையாளர்களிடம கையளிக்கப்படவுள்ளது.

கோப்பாய், இராசபாதையில் அமைந்துள்ள கோப்பாய் பொலிஸ் நிலையம், கடந்த35 வருடங்களாக பொலிசாரின் கட்டுப்பாட்டிலும், பயன்பாட்டிலும் உள்ளது. அந்தகாணியின் உரிமையாளர்கள், காணியை தம்மிடம் கையளிக்குமாறு பல்வேறுதரப்பினரிடம் கோரிக்கை விடுத்து வந்தநிலையில் அதற்கு பலன்கிட்டவில்லை.

இந்நிலையில், 2019ஆம் ஆண்டு, காணிகளுக்கு சொந்தமான 9 உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடினர்.

கடந்த 6 ஆண்டுகளாக இந்த வழக்கு யாழ் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில்நடந்த நிலையில், கடந்த யூன் மாதம் 27ஆம் திகதி வழக்கின் தீர்ப்புவெளியானது.

பொது மக்களின் காணியிலிருந்து வெளியேறி, அந்த காணியைஉரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டுமென மாவட்ட நீதிபதி சி.சதீஸ்கரன்உத்தரவிட்டார்.

எனினும், இதுவரை பொலிசார் காணியை கையளிக்கவில்லை என்பதுடன் கோப்பாய் பொலிஸ் நிலையத்தை உரும்பிராய் பகுதிக்கு மாற்றும்நடவடிக்கைகள் நடந்து வருகிறது. பகுதியளவில் இடமாற்ற நடவடிக்கைகள்முடிந்துள்ளதுடன் முழுமையான இடமாற்றம் நடந்து முடியவில்லை.

இந்த நிலையில், நாளை (ஒக்.15) நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற,  நீதிமன்றபதிவாளர் கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு சென்று, அங்குள்ள பொலிசாரை வெளியேற்றி, காணியை உரிமையாளர்களிடம்கையளிக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Share this Article