கோட்டாபயவின் வெளிநாட்டு பயணத் தடை நீடிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வௌிநாட்டு பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (25/11) நிராகரித்துள்ளது.

 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கிற்கு அமைய, தமக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோரிக்கை மனுவொன்றை முன்வைத்திருந்தார்.

 இது தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், இந்த கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்த தகவல்களை மறைத்தமை மற்றும் அது தொடர்பான விசாரணைகளைத் திசைதிருப்பியமை தொடர்பில், அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களுக்கு எதிராகக் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சட்ட நடவடிக்கைகளுக்கு அமையவே இந்த வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

Share this Article
Leave a comment