கொடிகாமத்தில் நடந்த பெரும் விபத்து! – பயணிகள் பலர் படுகாயம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம், கொடிகாமத்தில் ஏ-9 வீதியில் இன்று (ஜூன் 25) நடந்த பஸ் விபத்தில் பயணிகள் பலர் காயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொடிகாமம் நோக்கிப் பயணித்த பயணிகள் மினி பஸ்ஸூம், கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த ஹைஏஸ் வாகனம் ஒன்றும் மோதி இந்த விபத்து நடந்துள்ளது.

விபத்தில் மினிபஸ் தடம்புரண்டதில் பயணிகள் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் சாவகச்சேரிப் பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகின்றது.

Share this Article