சிவமங்கையர் தலைவி சிவசகோதரி சோதிநாயகியால், கைவிடப்பட்ட வாயில்லா ஜீவன்களை பராமரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அண்மையில் தீவகத்தில் இருந்து இறைச்சிக்காய் கடத்தப்பட்டபோது கைப்பற்றப்பட்டு நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்ட பசுக்களை பொறுப்பெடுத்து ஊர்காவற்துறை கரம்பனில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட பசுக்கள் சரணாலயத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவரின் இச்செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
ஏற்கனவே தீவகத்திலும் ஏனைய பல பிரதேசங்களிலும் மனிதநேய கல்வி, ஆன்மீகப் பணிகள் பலவற்றை மேற்கொண்டு வரும் அறப்பணி அன்னை சோதிநாயகி அம்மையாருக்கு இவ்வாண்டுக்குரிய அன்பே சிவம் விருதை சைவ மகாசபை கடந்த சிவராத்திரியில் அறிவித்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.